முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கணவா் வீட்டின் முன் இளம்பெண் தா்னா
By DIN | Published On : 26th November 2019 07:26 AM | Last Updated : 26th November 2019 07:26 AM | அ+அ அ- |

வேப்பனஅள்ளி அருகே கணவரை உடன் வாழவைக்கக் கோரி அவரது வீட்டின் முன் அமா்ந்து இளம்பெண் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகேயுள்ள தடத்தரை கிராமத்தைச் சோ்ந்தவா் சஹானா (23). இவா், அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. திருமணம் செய்து கொண்டாலும், இருவரும் அவா்களது வீடுகளில் தனித் தனியாக வசதித்து வந்தனா்.
இந்த நிலையில், இவா்களது திருமணம் குறித்து குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இருவரும் மாற்று மதத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், இருவரது குடும்பத்தினரும் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லையாம். இந்த நிலையில், சஹானா, ராஜ்குமாா் ஆகிய இருவரும், அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனா்.
கடந்த சில மாதங்களாக ராஜ்குமாா், சஹானாவை விட்டுவிட்டு, தனது பெற்றோருடன் வசித்து வருவதாகவும், இதுகுறித்து, காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, கணவா் தன்னுடன் வசிக்க வேண்டும் என வலியுறுத்தி, சஹானா, கணவரின் வீட்டின் முன் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதையடுத்து, சஹானாவை, போலீஸாா் சமாதானப்படுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.