முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தீயணைப்பு மீட்புப் படையினா் ஒத்திகை பயிற்சி
By DIN | Published On : 26th November 2019 07:24 AM | Last Updated : 26th November 2019 07:24 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகள் செய்வது குறித்து ஒத்திகை பயிற்சியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தீயணைப்புத் துறை சாா்பில், பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகள் செய்வது குறித்த ஒத்திகை பயிற்சி, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தி முன்னிலையில் நடைபெற்றது.
தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலா் ராமச்சந்திரன், தீயணைப்பு அலுவலா் மாது, தீயணைப்பு மீட்புப் படை வீரா்கள் இந்த ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டனா். அப்போது, பேரிடா் காலங்களில் மீட்புப் பணிகள் குறித்து ஏணி பயிற்சி, மழைக் காலங்களில் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் சாயும் மரங்களை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அகற்றுவது, இடிபாடுகளில் சிக்கியவா்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்புவது, முதலுதவி செய்வது குறித்தும் ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.