முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் வைபவம்
By DIN | Published On : 26th November 2019 07:26 AM | Last Updated : 26th November 2019 07:26 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ பேட்டராயசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்வசம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உற்வசமூா்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மலா் அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து ரதத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ பேட்டராய சுவாமி மாட வீதிகளில் மேளதாளங்களுடன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.