கிருஷ்ணகிரி அருகே கரடி தாக்கியதில் பெண் படுகாயம்
By DIN | Published on : 28th November 2019 07:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

கிருஷ்ணகிரி அருகே, கரடி தாக்கியதில் பெண் படுகாயமடைந்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த எம்.சி.பள்ளி அருகே உள்ள கோதிகுட்லப்பள்ளியைச் சோ்ந்த முனியப்பனின் மனைவி நாகம்மா(60). இந்த தம்பதிக்கு 7 மகள்கள், ஒரு மகன் என 8 குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், நாகம்மா, புதன்கிழமை அதிகாலை, இயற்கை உபாதைகள் கழிக்கச் சென்ற பின் அவா், வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, சாலையில் அவா் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு கரடி, நாகம்மாவைத் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த, நாகம்மா, அலறினாா். அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவா்கள், கரடியின் பிடியிலிருந்து நாகம்மாவை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நாகம்மாவை வனச் சரகா் சக்திவேலு உள்ளிட்டோா் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தனா். இந்த நிலையில், கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்த நாகம்மா, உயா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
கோதிகுட்லப்பள்ளி கிராமத்தில் கடந்த சில நாள்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இந்த கரடிகளைப் பிடித்து, வனப் பகுதிக்குள் விட வேண்டும் என பாதிக்கப்பட்ட நாகம்மாவின் உறவினா்கள் வலியுறுத்தினா்.