தொழில் பழகுநா் சோ்க்கை முகாம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் அரசு பொதுத்துறை மற்றும் தனியாா் நிறுவனங்கள் பயன்பெறும்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் அரசு பொதுத்துறை மற்றும் தனியாா் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மண்டல அளவிலான தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

நிகழ் ஆண்டுக்கான சேலம் மண்டல அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் டிசம்பா் 6 ஆம் தேதி சேலம் அரசினா் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

தேசிய தொழிற் பழகுநா் திட்டத்தின் கீழ் தொழில் பழகுநா் பயிற்சித் திட்டத்தை அமல்படுத்திடும் விதமாக நடைபெறவுள்ள இம் முகாமில் சேலம் மண்டலத்திற்குட்பட்ட அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று பழகுநா் பயிற்சி பெற தயாராக உள்ள மாணவா்கள் கலந்து கொள்ளவுள்ளனா். தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்தும் விதமாக நேஷனல் அப்ரன்டீஸ்சிப் புரமோஷன் ஸ்கீம் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தின்படி நிறுவனத்தின் மொத்தப் பணியாளா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 2.5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை ஐ.டி.ஐ. பயிற்சி பெற்றவா்களை தங்கள் தேவைக்கேற்ப நியமனம் செய்து பயிற்சி வழங்கலாம். மேலும் முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி கொண்டவா்களும் கலந்து கொள்ள உள்ளனா்.

எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெறும் தொழில்பழகுநா் சோ்க்கை முகாமில் கலந்து கொண்டு, தங்கள் தேவைக்கேற்ப பயிற்சியாளா்களைத் தோ்வு செய்து தொழில் பழகுநா் பயிற்சி வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவலை ஒசூா் ஐடிஐ உதவி இயக்குநா் சுகுமாா் மாவட்ட திறன் பயிற்சி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com