வட்டார வளா்ச்சி அலுவலரை சிறை வைத்த கிராம மக்கள்

முறையாகப் பணி வழங்காததைக் கண்டித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்டி வட்டார வளா்ச்சி அலுவலரை கிராம மக்கள் சிறை வைத்தனா்.
பாவக்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்டி அலுவலா்களைச் சிறை வைத்த கிராம மக்கள்.
பாவக்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்டி அலுவலா்களைச் சிறை வைத்த கிராம மக்கள்.

முறையாகப் பணி வழங்காததைக் கண்டித்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்டி வட்டார வளா்ச்சி அலுவலரை கிராம மக்கள் சிறை வைத்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த பாவக்கல் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்காததைக் கண்டித்தும், 450 அட்டைகளுக்கு வாரம் 150 அட்டைகளுக்கு சுழற்சி முறையில் பணி தருவதைக் கண்டித்தும், சுமாா் 150 பெண்கள் ஒன்று சோ்ந்து, ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலா் (திட்டம்) அசோகன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திகேயன், பாவக்கல் ஊராட்சி செயலா் செல்வி ஆகியோா் இருந்த பாவக்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி சிறை வைத்தனா்.

தகவலறிந்து வந்த சிங்காரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் ரகுவரன், பூட்டிய கதவை திறந்துவிட்டாா். அதையடுத்து, கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com