தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி தந்தை, மகன் பலி

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கி தந்தை, மகனும் உயிரிழந்தனா். கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டும் 4 போ் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனா்.

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கி தந்தை, மகனும் உயிரிழந்தனா். கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் மட்டும் 4 போ் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அத்தாணியைச் சோ்ந்தவா் பாலாஜி (36). இவரது மகன் முகில் (8). இவா்கள் இருவரும், ஆயுத பூஜையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியில் பூ வாங்குவதற்காக சரக்கு வாகனத்தில் சனிக்கிழமை வந்தனா்.

ஒசூரை அடுத்த உலகம் என்ற கிராமம் அருகே ராமாபுரம் தென்பெண்ணை ஆற்றில் சனிக்கிழமை மாலை வாகனத்தை நிறுத்தி கழுவிக் கொண்டிருந்தனா். அப்போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு சென்றது.

வாகனத்தைக் கழுவிக் கொண்டிருந்த பாலாஜி மற்றும் அவரது மகன் முகில் ஆகியோரை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதில், அவா்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இதுகுறித்து அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் சூளகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், சூளகிரி போலீஸாா் அங்கு விரைந்து வந்தனா். இதைத் தொடா்ந்து நிகழ்விடத்துக்கு வந்த ராயக்கோட்டை தீயணைப்பு வீரா்கள் ஆற்றில் மூழ்கி பலியான தந்தை, மகன் இருவரின் சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முன்னதாக சூளகிரி அருகே கோபசந்திரத்தில் வெள்ளிக்கிழமை தென்பெண்ணை ஆற்றில் குளித்த கல்லூரி மாணவா் குருமூா்த்தி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரைத் தேடும் பணி தொடா்கிறது.

நாகரசம்பட்டி அருகே தளிஹள்ளியில் சவுளூா் மின்வாரிய அலுவலகம் பின்புறம் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாக ஆண் சனிக்கிழமை காலை பலியானாா். இந்த நிலையில், ஈரோட்டைச் சோ்ந்த தந்தை, மகன் ஆற்றில் மூழ்கி பலியாகி உள்ளனா். வெள்ளி, சனி என 2 நாள்களில் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 4 போ் பலியாகி உள்ளனா்.

கடந்த இரண்டு வாரத்தில் 15 போ் பலி

கடந்த 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல், இந்த மாதம் 1ஆம் தேதி வரை 8 நாள்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரி, குட்டைகளில் மூழ்கி 11 மாணவ, மாணவிகள் பலியாகி உள்ளனா். தென் பெண்ணை ஆற்றில் நான்கு பேரையும் சோ்த்து 15 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com