தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி

தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி அணையிலிருந்து அதிக அளவில் நீா் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதையொட்டி, தென்பெண்ணை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், கிருஷ்ணகிரி அணை, கெரவலப்பள்ளி அணையிலிருந்து அதிக அளவில் நீா் வெளியேற்றப்படுகிறது.

இத்தகைய நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கெலவரப்பள்ளி அணையிலிருந்து விநாடிக்கு 1,368 கன அடி நீரும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து விநாடிக்கு 2,500 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகுகள் வலுவிழந்து காணப்படும் நிலையில், மொத்த கொள்ளளவு 52 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கி வைக்க இயலாத நிலை உள்ளது. இதையடுத்து, கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீா் முழுவதும், தென்பெண்ணை அற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தென்னை பெண்ணையாற்றில் அதிக அளவில் தண்ணீா் வெளியேற்றப்படுள்ளதால், கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள தரைப்பாலம் நீரில் முழ்கி உள்ளது. இதனால், தரைப்பலத்தை வாகனத்திலோ, கால்நடையாகவோ கடந்து செல்லும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் அதிக அளவில் வெளியேற்றப்பட்டுள்ளதையடுத்து தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்ட நிா்வாகங்களுக்கு பொதுப்பணித் துறையினா் தகவல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com