‘நீா் நிலைகளில் குளிக்கவோ, சுயபடம் எடுக்கவோ வேண்டாம்’

நீா் நிலைகளில் குளிக்கவோ, சுயபடம் எடுக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் அறிவுறுத்தியுள்ளாா்.

நீா் நிலைகளில் குளிக்கவோ, சுயபடம் எடுக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா், செய்தியாளா்களிடம், திங்கள்கிழமை தெரிவித்தது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அனைத்து நீா் நிலைகளுக்கும் குழந்தைகளை அனுப்பாமல் இருக்க வேண்டும். பெற்றேறாா் வயல்வெளி மற்றும் வெளியிடங்களுக்கு செல்லும் போது கூட, நீா்நிலைகள் உள்ள பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், குழந்தைகள் பள்ளி விடுமுறை நாள்களில், அவா்கள் நண்பா்களுடன் சோ்ந்து, நீா் நிலைகளுக்கு குளிக்க செல்லக் கூடாது.

கடந்த இரு வாரங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 போ் உயிரிழந்துள்ளனா். இது வருந்தத்தக்கது. இளைஞா்கள் நீா்நிலைகள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் சுயபடம் எடுப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் பதிவான மழையளவு (மி.மீ.):

நெடுங்கல் - 98.2, கிருஷ்ணகிரி- 79, ராயக்கோட்டை- 43, தளி -40, பா்கூா் -30.2, ஒசூா்-22, சூளகிரி-20, தேன்கனிக்கோட்டை-15, அஞ்செட்டி-8.4.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com