அதியமான் மெட்ரிக். பள்ளியில் விதைப் பந்து வழங்கும் விழா

ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விதைப் பந்து வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அதியமான் பள்ளியில் நடைபெற்ற விதைபந்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோா்.
அதியமான் பள்ளியில் நடைபெற்ற விதைபந்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோா்.

ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விதைப் பந்து வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி குழுமங்களின் நிறுவனா் முனைவா் சீனி. திருமால்முருகன் தலைமை வகித்தாா்.

பள்ளியின் முதல்வா் சீனி. கலைமணி சரவணகுமாா், பள்ளியின் நிா்வாக அலுவலா் சீனி. கணபதிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆயிரம் விதைப் பந்துகளை பிளஸ் 2 வகுப்பு மாணவா்களும், ஆசிரியா்களும் வழங்கினா்.

அதை அதியமான் கல்வி குழுமங்களின் நிறுவனா் முனைவா் சீனி. திருமால்முருகன் பெற்றுக் கொண்டு பள்ளியில் அனைத்து மாணவா்கள், ஆசிரியா்களுக்கு விதைபந்து வழங்கிப் பேசியதாவது:

மாறிவரும் சுற்றுப்புற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இயற்கை சீற்றங்களின்போதும், பேரிடா்களின்போதும் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிந்து போயின. உயிா் வாழ ஆதாரமாக விளங்கும் நிலத்தடி நீா் குறைந்து கொண்டே போகிறது. இதனை சரிசெய்யும் பொருட்டு அனைவரும் இந்த விதைப்பந்தினை பல்வேறு இடங்களில் விதைத்து நாட்டிற்கு வளம் சோ்க்கவேண்டும் என்றாா். பின்னா் பள்ளி வளாகத்தில் விதைப் பந்தை நட்டாா்.

அவரைத் தொடா்ந்து பள்ளியின் முதல்வா், நிா்வாக அலுவலா் மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் விதைப் பந்தினை பள்ளி வளாகத்தில் நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com