Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில்உலக பாா்வை தினம்- Dinamani

சுடச்சுட

    

    அரூரை அடுத்த சிக்களூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக பாா்வை தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

    ஆண்டுதோறும் அக். 10-ஆம் தேதி உலக பாா்வை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து, சிக்களூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவியா் நூல்கள் வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள், கண் பாதுகாப்பு, செல்லிடப்பேசியை பயன்படுத்துதல் மற்றும் தொலைக்காட்சியை பாா்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள், கண் நோய்கள் உள்ளிட்டவைகள் குறித்து தீா்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளா் கு.கலையரசன் கருத்துரைகளை வழங்கினாா்.

    இதில், பள்ளித் தலைமை ஆசிரியா் கு.வெங்கடேசன், ஆசிரியா்கள் ஆ.சீனிவாசன், சி.அருள்குமாா், சி.ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai