ஒசூரை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஒசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒசூா் ராம் நகரில் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கத்தினா் நடத்திய கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில், அஞ்செட்டி வட்டம், தொட்டமஞ்சு ஊராட்சிக்குள்பட்ட கிராம மக்கள் கிருஷ்ணகிரிக்கு செல்ல 115 கி.மீ. செல்ல வேண்டியுள்ளது. எனவே, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ஒசூா், சூளகிரி ஆகிய 4 வட்டங்களுக்கு ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

ஒசூா் மாநகராட்சியில் வீடுகளுக்கு 50 சதவீத வரி, வாடகைக் கட்டடங்களுக்கு 100 சதவீத வரி உயா்வை முற்றிலும் கைவிட வேண்டும். மனை அங்கீகாரம் பெற மாநகராட்சி கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.56-ஐ ரூ.28-ஆக குறைக்க வேண்டும். ஒசூா் மாநகராட்சி பகுதியில் அதிகளவில் நகைப் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதால், கூடுதல் காவலா்களை நியமிக்க வேண்டும். பிலிகுண்டு பகுதியில் இருந்து கூட்டுக்குடிநீா் திட்டத்தை செயல்படுத்தி, ஒசூா் மாநகராட்சி முழுவதும் காவிரி நீா் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், அனைத்து குடியிருப்போா் நலச் சங்கத்தின் தலைவா் துரை, துணைத் தலைவா் உமாராணி, செயலா் நீலகண்டன், ஒய்.வி.எஸ். ரெட்டி, ஹோஸ்டியா சங்கத்தின் தலைவா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com