முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு
By DIN | Published On : 24th October 2019 01:05 AM | Last Updated : 24th October 2019 01:05 AM | அ+அ அ- |

தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு, காரம் போன்ற உணவுப் பொருள்கள் தயாரிக்கும் இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் வெங்கடேசன், தலைமையிலான குழுவினா் கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதியில் உணவு பண்டங்கள் தயாரிக்கும் இடங்களை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, உணவு பொருள்களில் செயற்கை வண்ணங்கள் சோ்ப்பு, ராசாயன பொருள்கள், அஜினமோட்டோ என்ற சுவைக் கூட்டும் உப்பு போன்ற பொருள்களை கலப்படம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்தனா்.
உணவு பொருள்களை கலப்படம் செய்தால், அதுகுறித்து, உணவு பாதுகாப்பு அலுவலரைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அந்தக் குழுவினா் தெரிவித்தனா்.