சுடச்சுட

  

  தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ், நடுப்பையூர் கிராமத்தில் கால்நடை நோய் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
   தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டம், தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் கோமாரி நோய்த் தடுப்பு, கருச்சிதைவு நோய் மற்றும் செயற்கை கருவூட்டல் முகாமானது நடுப்பையூர் கிராமத்தில் நடைபெற்றது.
   முகாமுக்கு, வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் டி.சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் எம்.மனோகரன், உதவி இயக்குநர் ஏ.அருள்ராஜ், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் என்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   செயற்கை கருவூட்டல் முறையின் நோக்கம், அதன் முக்கியத்துவம், கருச்சிதைவு மற்றும் கன்று சிதைவு நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள், கால்நடை வளர்ப்பில் அசோலா பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
   இந்த முகாமில் கோமாரி நோய்த் தடுப்பூசி 250 மாடுகளுக்கும், செயற்கை கருவூட்டல் 30 மாடுகளுக்கும் அளிக்கப்பட்டன. தாது உப்பும் வழங்கப்பட்டன. நாடு முழுவதும் கால்நடைகளுக்கான தடுப்பூசி, நோய் மேலாண்மை, செயற்கை கருவூட்டல் மற்றும் உற்பத்தி தலைப்புகளில் நடைபெற்ற பயிலரங்குகளை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்ததை இந்த முகாமில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
   இந்த முகாமை வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள், கால்நடை மருத்துவர் எஸ்.ரமேஷ், கே.குணசேகரன், எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai