சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
   இக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலர் முருகன் எம்.எல்.ஏ, ஒசூர் நகரப் பொறுப்பாளர் சத்யா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட திமுக செயலர் தளி.பிரகாஷ் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.
   இதில், திருவண்ணாமலையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பெருமளவில் கலந்துகொள்வது, காட்டு யானைகளால் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், பயிர்சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணங்களும் வழங்க வேண்டும். கோவை முதல் தேவனஹள்ளி வரை எரிவாயு குழாய்களை விவசாய நிலங்களில் அமைப்பதை கைவிட்டு, மாற்றுப்பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். திமுக ஆட்சியில் கொண்டுவந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மாவட்டம் முழுவதும் சீராக வழங்க வேண்டும். கிராமங்களில் புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   இதில், மாநில சிறுபான்மை துணை அமைப்பாளர் விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட துணைச் செயலர் சீனிவாசன், மாவட்டப் பொருளாளர் ஜெயராமன், ஒன்றியச் செயலர்கள் சீனிவாசலு ரெட்டி, திவாகர், கணேசன், நாகன், நாகேஷ், வெங்கடேஷ், ரகுநாத், பேரூர் செயலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai