சுடச்சுட

  

  ஸ்ரீ பூரிகைமரத்து முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா

  By DIN  |   Published on : 13th September 2019 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மஜீத்கொல்லஅள்ளி கிராமத்தில் உள்ள பழமையான ஸ்ரீ பூரிகைமரத்து முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
   கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், மஜீத்கொல்லஅள்ளி கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பூரிகைமரத்து முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலக்தாபனம், யாகசாலை பிரவேசம், மண்டல அர்ச்சனை, முதல்கால பூஜை, மகா கணபதி ஹோம் ஸ்ரீமாக முனீஸ்வரா ஹோமம், குபேர ஹோமம், குபேரலட்சுமி ஹோமம், மகா துர்கா ஹோமம், கலச பூஜை, கும்ப கலச பூஜை போன்ற நிகழ்வுகள் புதன்கிழமை நடைபெற்றன.
   தொடர்ந்து, கும்பாபிஷேக விழா நாளான செப். 12-ஆம் தேதி ஸ்ரீ கும்பகலச பூஜை, கலச பூஜை, ஸ்ரீ மகா கணபதி ஹோமம், அனைத்து கலச ஹோமம், ஜெய்தி ஹோமம், ஸ்ரீ முனியப்பன் சுவாமி மகா கும்பாபிஷேகே விழா நடைபெற்றது. கோபுர கலச ஊர்வலத்துடன், மங்கள வாத்தியங்கள் முழங்க புண்ணிய நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டது.
   கும்பாபிஷேகத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இந்த விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai