Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்: இருவருக்கு சிறை தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம்: இருவருக்கு சிறை தண்டனை

    By DIN  |   Published on : 14th September 2019 03:10 AM  |   அ+அ அ-   |    |  

    ஒசூர் அருகே மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்களுக்கு, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் சிறை தண்டனையை வெள்ளிக்கிழமை வழங்கியது. 
    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மாற்றுத் திறனாளி சிறுமி, 2013 நவ. 2-ஆம் தேதி கடைக்கு சென்ற போது, பாகலூர் சாலையைச் சேர்ந்த ஆர்.சுரேஷ், ஒசூர், பஸ்தி, பாரதியார் நகரைச் சேர்ந்த எஸ்.சுரேஷ் (23) ஆகியோர் அவரை பாலியல் பலாத்காரம் செய்தனராம்.  இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், இருவரையும் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், தீர்ப்பை நீதிபதி வெள்ளிக்கிழமை வாசித்தார். 
    அதில், குற்றம்சாட்டப்பட்ட ஆர்.சுரேஷுக்கு  ஆயுள்தண்டனையில் பாதியும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் 3 மாத சிறையும், கொலை மிரட்டல் பிரிவுக்கு 3 ஆண்டுகள் சிறையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்தார். அதேபோல், குற்றவாளி எஸ்.சுரேஷுக்கு ஆயுள்தண்டனையில் பாதியும், ரூ.6 ஆயிரம் அபராதமும், தவறும் பட்சத்தில் 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

    kattana sevai