வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

அரூர் வட்டாரப் பகுதியில் வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரூர் வட்டாரப் பகுதியில் வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க தருமபுரி மாவட்டச் செயலர் எம்.முத்து தலைமை வகித்தார்.
இதில், அரூர் வட்டம், கீழானூர், மேல்செங்கப்பாடி, கோமாளிப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். செல்லம்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஜடையம்பட்டி மற்றும் அரூர்அம்பேத்கர் நகரில் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள வீட்டு மனைப்பட்டாக்களை அளவீடு செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
மொரப்பூர் அண்ணல் நகர், கோட்டப்பட்டி அண்ணா நகர், கே.ஈச்சம்பாடி ஆகிய கிராமங்களில் வீடுகள் அமைத்து குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். மேல்செங்கப்பாடியில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் வீ.அமர்தலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரா.சிசுபாலன், மாவட்டத் தலைவர் சோ.அருச்சுணன், மாவட்டப் பொருளாளர் இ.கே.முருகன், ஒன்றியச் செயலர்கள் ஆர்.மல்லிகா, தங்கராஜ், ஆறுமுகம், எஸ்.கே.கோவிந்தன், வாலிபர் சங்க ஒருங்கிணைப்பாளர் சி.வேலாயுதம், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com