ஊத்தங்கரை பரசனேரி ஏரிக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசுப் பேருந்து நிலையம் அருகே  உள்ளது பரசனேரி ஏரிக்கரை.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசுப் பேருந்து நிலையம் அருகே  உள்ளது பரசனேரி ஏரிக்கரை.
ஊத்தங்கரை - திருப்பத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  ஏரிக்கரை அமைந்துள்ளது.
இந்த ஏரிக்கரை சுமார் 700 மீட்டர் தூரம் கொண்டது. ஊத்தங்கரை - திருப்பத்தூர் செல்லும் போது இடது புறம் ஏரியும், வலது புறம் சுமார் 30 அடி பள்ளமும் உள்ளது.
இந்த நிலையில், நெடுஞ்சாலையின் இரு புறத்திலும் தடுப்புச்சுவர் ஏதும் அமைக்கப்படவில்லை. மேலும் தற்போது பெய்துள்ள மழையில் சாலை பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்தச் சாலை அதிக வளைவுகள் கொண்டு அமைந்துள்ளது, சாலை தடுப்புச் சுவர் இல்லாமல் சுமார் 10 மீட்டர் குறுகிய அகலம் கொண்டதாக உள்ளது, இந்தச் சாலையில் சராசரியாக மாதத்துக்கு இரண்டு கனரக வாகனங்கள் இருபுறம் உள்ள ஏதேனும் ஒரு பக்கம் சரிந்து விழுவது வழக்கமாக உள்ளது.
மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், கனரக வாகனம் செல்லும்போது ஆபத்தான நிலையில் கடக்க நேரிடுகிறது.
ஊத்தங்கரையில் இருந்து வெளியே செல்ல வேண்டும் எனில் இந்தச் சாலையை கடந்து தான் காலை,மாலை நேரங்களில் பள்ளி ,கல்லூரி மாணவ -மாணவிகள் மற்றும் அரசு பேருந்துகள்,கனரக வாகனங்கள் அதிகப்படியான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. அதிகப்படியான விபத்துகள் ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பெரும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, பரசனேரி ஏரிக்கரையின் இருபுறமும் வாகன தடுப்புச் சுவர் அமைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை காக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com