திருப்பதிக்கு ஆன்மிக நடைபயணம்

புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து, போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் திருப்பதிக்கு ஆன்மிக நடைபயணத்தை வியாழக்கிழமை தொடங்கினர்.

புரட்டாசி மாதம் பிறந்ததையடுத்து, போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் திருப்பதிக்கு ஆன்மிக நடைபயணத்தை வியாழக்கிழமை தொடங்கினர்.
கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், புரட்டாசி மாத பிறப்பையொட்டி, திருப்பதிக்கு சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். 
போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தம்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி திருப்பதிக்கு செல்வது வழக்கமாம். அதுவும் அருள்வாக்கு கிடைத்தால் மட்டுமே செல்வார்களாம். அதன்படி, அக்கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், திருப்பதிக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்வது குறித்து அருள்வாக்கு அளித்த நிலையில், கிராமத்தைச் சேர்ந்த 50 பெண்கள், 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி நடைபயணமாக திருப்பதிக்கு ஆன்மிக பயணத்தை வியாழக்கிழமை அதிகாலை தொடங்கினர்.
அனைவரும் மஞ்சள் நிற ஆடை அணிந்து திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், சித்தூர் வழியாக திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இத்தகைய நடைபயணத்தை இந்த கிராம மக்கள் பல தலைமுறைகளாக கடைப்பிடித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com