கால பைரவர் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள கால பைரவர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தேய்பிறை அஷ்டமியையொட்டி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள கால பைரவர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி பழையபேட்டையை அடுத்த பெரிய ஏரிக்கோடிக் கரையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலபைரவர் கோயில் உள்ளது. இக் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு நடைபெற்றன.  பக்தர்கள் பூசணியில் விளங்கேற்றி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். 
தருமபுரியை அடுத்த அதியமான் கோட்டை காலபைரவர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், தருமபுரி , கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மற்றும் பெங்களூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். காரிமங்கலம் மலைக்கோயிலில் தேய்விறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. கணபதி ஹோமம், பைரவர் மூல மந்திர ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com