Enable Javscript for better performance
"குழந்தைகளை நீர்நிலைகளின் அருகில் விடவேண்டாம்'- Dinamani

சுடச்சுட

    

    பருவமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி வருவதால் குழந்தைகள் மற்றும்  பெரியவர்களை நீர்நிலைகளின் அருகில் விட வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.
    இதுகுறித்து,  ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை நீரைச் சேமிக்கும் வகையில் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு, கரைகளைப் பலப்படுத்தி  அதிக அளவில் நீரைத் தேக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  
    தற்போது, மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ளஅனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. எனவே, பெற்றோர், தங்களது குழந்தைகள்,  வயதான பெரியவர்களை  நீர்நிலைகளின் அருகில் விளையாடவோ, குளிக்கவோ செல்லாதவாறு கண்காணித்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில்  அறிவுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai