Enable Javscript for better performance
நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி முதல்வருக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி முதல்வருக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 25th September 2019 10:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நல்லாசிரியர் விருது பெற்ற நாளந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வருக்குப் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
    கிருஷ்ணகிரி நாளந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சி.பார்வதி,  தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இதையொட்டி,  அண்மையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில்,  பள்ளித் தாளாளர் எம்.எஸ்.சாமுண்டீஸ்வரி கொங்கரசன், தலைமையாசிரியர் சி.பார்வதியைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் கேடயம் வழங்கினார். 
    அப்போது, பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், இயக்குநர்கள் கே.கௌதமன்,  கே.புவியரசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai