Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

    By DIN  |   Published on : 29th September 2019 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 898 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 
    கர்நாடக மாநிலத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து சனிக்கிழமை காலை 7 மணியளவில் வினாடிக்கு 898 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது. இதையடுத்து, கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 724 கன அடி நீரும், வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாய் மூலம் வினாடிக்கு 174 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. 
    தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீர், நெடுங்கல் தடுப்பணை வழியாக, பாரூர் எரிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்ணகிரி அணையின் நீர் வரத்து வினாடிக்கு 653 கன அடியாக இருந்தது. இத்தகைய நிலையில், அணையின் நீர்வரத்து குறையும் பட்சத்தில், அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவும் குறைக்கப்படும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai