ஒசூர் மாநகராட்சியில்டெங்கு தடுப்பு நடவடிக்கை

ஒசூர்  மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணியை மாநகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை மேற்கொண்டனர். 


ஒசூர்  மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணியை மாநகராட்சி ஊழியர்கள் சனிக்கிழமை மேற்கொண்டனர். 
ஒசூர் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்படி கொசுப் புழு உற்பத்தியாகும் தேக்கமடைந்துள்ள டயர்கள் அகற்றப்பட்டன. 
லாரி, பேருந்து, கார் டயர்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மாநககராட்சி பகுதிகளில் சனிக்கிழமை மட்டும் 5 ஆயிரம் கிலோ டயர்களை மாநகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்யதனர். மேலும் ஒசூர் மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குளிர்சாதனப் பெட்டியில் தண்ணீர் தேங்கியுள்ளதா எனவும், ஒவ்வொரு வீட்டின் மேல்கூரையில் தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் பொருள்களில் மழை நீர் தேங்கியுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com