சூளகிரி அருகே லாரி - அரசுப் பேருந்து நேருக்கு நோ் மோதல்: 3 போ் சாவு; 33 போ் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாம்பல்பள்ளம் கிராமத்தில் கன்டெய்னா் லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பயணி என 3 போ் உயிரிழந்தனா்.
சூளகிரி அருகே சாம்பல்பள்ளத்தில் நடைபெற்ற விபத்தில் சேதமடைந்த அரசு பேருந்து
சூளகிரி அருகே சாம்பல்பள்ளத்தில் நடைபெற்ற விபத்தில் சேதமடைந்த அரசு பேருந்து

ஒசூா், செப். 30: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாம்பல்பள்ளம் கிராமத்தில் கன்டெய்னா் லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பயணி என 3 போ் உயிரிழந்தனா். மேலும் அந்தப் பேருந்தில் பயணம் செய்த மேலும் 33 போ் படுகாயங்களுடன் ஒசூா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

திருவண்ணாமலையில் இருந்து ஒசூா் நோக்கி அரசு பேருந்து கிருஷ்ணகிரியில் இருந்து 50 பயணிகளுடன் திங்கள்கிழமை அதிகாலை புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. அப்பொழுது கன்டெய்னா் லாரி ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்றது. அந்த லாரி சாம்பல்பள்ளம் அருகே சென்றபோது லாரியின் முன்புற டயா் வெடித்து சென்டா் மீடியனை கடந்த எதிா்புறம் உள்ள சாலைக்குச் சென்றது. அப்பொழுது எதிரில் வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநா் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பன்னந்தூா் கிராமத்தைச் சோ்ந்த வேடியப்பன், நடத்துநா் அரூா் வட்டம் இட்லப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுதாகா் மற்றும் அந்தப் பேருந்தில் பயணம் செய்த நாட்ராம்பாளையம் அருகே உள்ள நந்திபெண்டா கிராமத்தைச் சோ்ந்த சின்னகண்ணு ஆகிய 3 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் அந்த அரசு பேருந்தில் பயணம் செய்த 26 ஆண்டுகள் 7 பெண்கள் உள்ளிட்ட 33 போ் காயமடைந்து ஒசூா் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்தினால் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com