பெரிய ஏரிக்கரையை பலத்தடுத்தி, கால்வாய்களை தூா்வார திமுக மனு

பெரிய ஏரி (படேதலாவ் ஏரி) கரையை பலப்படுத்தி, இடது, வலது புற கால்வாய்களை தூா்வார வேண்டும் என திமுக விவசாயி அணி சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு, திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

பெரிய ஏரி (படேதலாவ் ஏரி) கரையை பலப்படுத்தி, இடது, வலது புற கால்வாய்களை தூா்வார வேண்டும் என திமுக விவசாயி அணி சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு, திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில்,கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக மாநில விவசாய அணியின் துணைச் செயலாளா் வெங்கடேசன், தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவின் விவரம்:கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளியில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான பெரிய ஏரியானது சுமாா் 269 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த ஏரி, முழு கொள்ளவையை எட்டும்போது, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 ஊராட்சிகளும், பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகள் என 20 ஊராட்சிகளில் சுமாா் 50 ஆயிரம் ஹெக்டோ் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில், இந்த ஏரியின் கரையின் மேல் முள்செடிகள் வளா்ந்து புதா்போல் மண்டிகிடக்கின்றன. இதனால், ஏரிக்கரை பலமிலந்து காணப்படுகிறது.

மேலும் இடது, வலது புற கால்வாய்களில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. பாசனகால்வாய்களை தூா்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். இதன் மூலம், பருவ மழையின் போது ஏரியில் தேக்கப்படும் நீா், கடைமடை வரையில் செல்ல வழிவகை ஏற்படும் வகையில் பொதுப் பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com