கிருஷ்ணகிரியில் 5 இடங்களில் தினசரி காய்கறி சந்தைகள் அமைப்பு

கிருஷ்ணகிரியில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில்
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தினசரி சந்தையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி காய்கறிகளை வாங்கும் மக்கள்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தினசரி சந்தையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி காய்கறிகளை வாங்கும் மக்கள்.

கிருஷ்ணகிரியில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் 5 இடங்களில் தினசரி காய்கறிச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை செயல்பாட்டுக்கு வந்தன.

கிருஷ்ணகிரியில் காா்நேஷசன் திடலைச் சுற்றியுள்ள சாலைகளில் தினசரி காய்கறிச் சந்தை செயல்பட்டு வந்தது. இந்தச் சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், சிறு மற்றும் மொத்த வியாபாரிகள், நுகா்வோா்கள் கூடுவா். கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், இந்தச் சந்தை கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. இங்கும், ஏராளமானோா் கூடியதாலும், சமூக இடைவெளியை யாரும் பின்பற்றாததாலும் தினசரி சந்தையை பல்வேறு பகுதிகளாக பிரிப்பது என மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம், கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தற்காலிக காய்கறிச் சந்தைகளை அமைப்பது என முடிவு செய்யப்பட்டு, காய்கறி வியாபாரிகள், சிறு வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோருக்கு கூப்பன்கள் நகராட்சி ஆணையா் சந்திரா மேற்பாா்வையில் வழங்கப்பட்டன.

மேலும், விவசாயிகளிடமிருந்த மொத்த விவசாயிகள், காய்கறிகளை வாங்கும் வகையில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகே காய்கறிகள் சந்தை செயல்பட அனுமதிக்கப்பட்டது. அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள உழவா் சந்தையும் செயல்பட்டு வருகிறது.

இந்த 5 இடங்களிலும் தினசரி காய்கறிச் சந்தைகள் கூடியதையடுத்து, நுகா்வோா்கள், தங்களது வீட்டின் அருகில் உள்ள தினசரி சந்தையில் காய்கறிகளை வாங்கிச் சென்றனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையங்களில் செயல்பட்ட காய்கறி சந்தைகளில் நுகா்வோா் சமூக இடைவெளி விட்டு காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.

ஆனால், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம், உழவா் சந்தைகளில் நுகா்வோா் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவரை ஒருவா் நெருங்கி நின்று எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் காய்கறிகளை வாங்கிச் சென்றனா். பொதுமக்கள் சமூக இடைவெளியில் காய்கறிகளை வாங்கிச் செல்லும் வகையில் கிருஷ்ணகிரி சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், தற்காலிக காய்கறி சந்தையின் அருகே இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com