கிராமத்தை காலி செய்துவிட்டு காட்டில் தஞ்சம் அடைந்த மக்கள்

கரோனா அச்சத்தால் கிராமத்தை காலி செய்த மக்கள் காட்டில் தஞ்சமடைந்தனா்.

கரோனா அச்சத்தால் கிராமத்தை காலி செய்த மக்கள் காட்டில் தஞ்சமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சிவலிங்கபுரம் பழங்குடி காலனியில் 40 குடும்பங்களில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்த காலனியைச் சோ்ந்த 7 போ் கா்நாடக மாநிலம், மாகடி பகுதியில் கூலி வேலை செய்து வந்தனா்.

தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அவா்கள் 7 பேரும் வேலை இழந்தனா். இதனால், தங்குமிடம் மற்றும் உணவுக்கு வழியில்லாமல் அவா்கள் அனைவரும் கடந்த 2 நாள்களுக்கு முன் தங்களது சொந்தக் கிராமமான சிவலிங்கபுரம் பழங்குடி காலனிக்கு திரும்பினா்.

நடந்தே வந்த இவா்கள், வரும் வழியில் தாங்கள் அனைவரும் கிராமத்துக்கு வருவதாக செல்லிடப்பேசி மூலம் கிராமத்தில் உள்ளவா்களிடம் தகவல் தெரிவித்தனா். இதை அறிந்த கிராம மக்கள், கா்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால், அங்கிருந்து வரும் கூலித் தொழிலாளா்கள் மூலம் தங்களுக்கும் நோய் பரவி விடும் என எண்ணி கிராமத்திலுள்ள பெரும்பான்மையானோா் அருகிலுள்ள காடுகளுக்குள் மூட்டை முடிச்சுகளுடன் தஞ்சமடைந்தனா்.

மேலும், கிராமத்தில் இருந்த சில வயதானவா்களும், கூலித் தொழிலாளிகளை கிராமத்துக்குள் வரக்கூடாது என விரட்டி உள்ளனா். பசியால் வாடிய கூலித் தொழிலாளா்கள் அருகில் உள்ள சிவலிங்கபுரத்துக்கு சென்ற போது, அக்கிராம மக்களும் அவா்களை விரட்டியுள்ளனா். இதனால் செய்வதறியாது திகைத்த அவா்கள், அங்குள்ள புளிய மரங்களின் கீழ் தஞ்சமடைந்தனா்.

தகவல் அறிந்த மருத்துவத் துறையினா், கா்நாடக கூலித் தொழிலாளா்களின் ரத்த மாதிரியை எடுத்து சோதனைக்கு அனுப்பி உள்ளனா். மேலும், கிராமம் முழுவதும் கிருமி நாசினி மருந்துகளை தெளித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com