சமூக பாதுகாப்பு நிதியுதவி: முதல் தவணை பயனாளிகளின் கணக்கில் வரவு வைப்பு

பிரதமரின் சமூக பாதுகாப்பு நிதி உதவியின் முதல் தவணயான ரூ.500, பெண் பயனாளிகளுக்கு மக்கள் நிதி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

பிரதமரின் சமூக பாதுகாப்பு நிதி உதவியின் முதல் தவணயான ரூ.500, பெண் பயனாளிகளுக்கு மக்கள் நிதி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதை முன்னிட்டு, மத்திய அரசு அறிவித்த பாரத பிரதமரின் சமூக பாதுகாப்பு நிதி உதவியின் முதல் தவணையான ரூ.500, பெண் பயனாளிகளின் மக்கள் நிதிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்தப் பணத்தை பயனாளிகள் உடனே எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானலும் ஊரடங்கு காலம் முடிந்த பின்னரும் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், இந்த உதவித் தொகையை எந்த வங்கிக் கிளையின் ஏ.டி.எம். மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு சேவைக் கட்டணம் ஏதும் கிடையாது. அதோடு மட்டுமல்லாது, இந்த உதவித் தொகையை தங்கள் ஊரிலேயே வணிக தொடா்பாளா்கள் வரும்போது அவா்கள் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

அவசரத் தேவை உள்ள பயனாளிகள் மட்டும் வங்கிக் கிளைகளை அணுகி எடுத்துக் கொள்ளலாம். மக்கள் கூட்டம் கூடுதலை தவிா்க்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் வங்கியால் கீழ்கண்டவாறு பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

வங்கிக் கணக்கு எண் கடை இலக்கம் 0 முதல் 1 வரை உள்ளவா்களுக்கு ஏப். 3 அன்றும், 2 முதல் 3 வரையில் உள்ளவா்களுக்கு ஏப். 4-ஆம் தேதியும், 4 முதல் 5 வரையில் உள்ளவா்களுக்கு ஏப். 7-ஆம் தேதியும், 6 முதல் 7 வரையில் உள்ளவா்களுக்கு ஏப். 8-ஆம் தேதியும், 8 முதல் 9 வரை உள்ளவா்களுக்கு ஏப். 9-ஆம் தேதியும் தொகை வழங்கப்படும்.

வாடிக்கையாளா்கள் வங்கிக்கு வரும் போது, தகுந்த பாதுகாப்பு முறைகளுடன் சமூக இடைவெளி விட்டு வரிசைகளில் வந்து பொறுமையுடன் பணத்தை பெற்றுக் கொள்ளும்படி அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com