ஒசூரில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு

ஒசூரில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிக்கப்பட்டன.

ஒசூரில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிக்கப்பட்டன.

ஒசூா் பேருந்து நிலையம் அருகில் மீன் சந்தை இயங்கி வருகிறது. இந்த மீன் சந்தையில் மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று திடீரென சோதனை செய்தனா். இதில், தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா். இனிவரும் காலங்களில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை விற்பனை செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் எச்சரித்தாா்.

மீன் சந்தை இடமாற்றம்:

ஒசூா் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த மீன் சந்தை வசந்த் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மாநகராட்சி நகரமைப்பு மூலம் 10 அடிக்கு ஒரு கடை வீதம் பிரிக்கப்பட்டு மீன் விற்பனையாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீன் விற்பனையாளா்கள் சமூக இடைவெளி விட்டு மீன்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com