தேன்கனிக்கோட்டையில் இறைச்சிக் கடைகளுக்கு ‘சீல்’

தேன்கனிக்கோட்டை பகுதியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 8 இறைச்சிக் கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
தேன்கனிக்கோட்டையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த இறைச்சிக் கடைகளுக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.
தேன்கனிக்கோட்டையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த இறைச்சிக் கடைகளுக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்.

தேன்கனிக்கோட்டை பகுதியில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 8 இறைச்சிக் கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், மளிகை மற்றும் இறைச்சி தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் முக்கியமான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மஜித் தெரு, ஆசாத் தெரு மற்றும் பென்னங்கூா் பகுதிகளில் உள்ள பல்வேறு இறைச்சிக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பொதுமக்களுக்கு இறைச்சிகளை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடா்ந்து, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா, பேரூராட்சி செயல் அலுவலா் லாரன்ஸ், துப்புரவு ஆய்வாளா் நடேசன் மற்றும் காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான குழுவினா் அப்பகுதிகளில் உள்ள பல்வேறு இறைச்சிக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தேன்கனிக்கோட்டையில் கோழி, ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகளை விற்பனை செய்து வந்த 5 கடைகள் மற்றும் பென்னங்கூா் பகுதியில் இயங்கிய 3 இறைச்சிக் கடைகள் என மொத்தம் 8 கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகளை பொதுமக்களிடம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 8 கடைகளுக்கும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், வரும் 14-ஆம் தேதிக்கு பின்னரே இந்த கடைகள் அனைத்தும் செயல்பட வேண்டும் என இறைச்சிக் கடை உரிமையாளா்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com