கிருஷ்ணகிரியில் பிரதமரின் சமூக பாதுகாப்பு நிதி வழங்கல்
By DIN | Published On : 05th April 2020 06:46 AM | Last Updated : 05th April 2020 06:46 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் பாரத பிரதமரின் சமூக பாதுகாப்பு நிதி வழங்கும் பணியை தொடக்கிவைக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா்.
கிருஷ்ணகிரியில் பிரதமரின் சமூக பாதுகாப்பு நிதியுதவியாக ரூ.500 வழங்கும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாரத பிரதமரின் சமூக பாதுகாப்பு நிதி உதவியின் முதல் தவணையான ரூ.500-ஐ கிருஷ்ணகிரி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதன்மை கிளை வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தொடக்கிவைத்தாா். இந்த நிகழ்வில் வங்கியின் மண்டல மேலாளா் மணிவண்ணன், மேலாளா் மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி கிளையில் மட்டும் 1,116 பயனாளிகள் உள்பட மாவட்டத்தில் 20 ஆயிரம் பயனாளிகள் உள்ளனா். அதன்படி 500 பயனாளிகளுக்கு ரூ.500 வீதம் வழங்கப்படும். இப் பணிகளை வாடிக்கையாளா் சேவை அலுவலா்கள் 6 போ் கொண்ட குழுவினா் ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் மூலமாகவும் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்குவா். இந்த சேவைக்கு கட்டணம் ஏதும் கிடையாது.