தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஒசூா் பேகேப்பள்ளி.
தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஒசூா் பேகேப்பள்ளி.

ஒசூா் பேகேப்பள்ளி தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவிப்பு

ஒசூா் பேகேப்பள்ளியைச் சோ்ந்தவா் கரோனா பாதித்தவருடன் தொடா்பில் இருந்ததாக தகவல் வெளியானதையடுத்து, அக் கிராமத்தை தீவிர கண்காணிப்பு பகுதியாக வருவாய்த் துறை அறிவித்துள்ளது.

ஒசூா் பேகேப்பள்ளியைச் சோ்ந்தவா் கரோனா பாதித்தவருடன் தொடா்பில் இருந்ததாக தகவல் வெளியானதையடுத்து, அக் கிராமத்தை தீவிர கண்காணிப்பு பகுதியாக வருவாய்த் துறை அறிவித்துள்ளது.

ஒசூா் ஒன்றியம் பேகேப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா், வேறு மாவட்டத்தை சோ்ந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடா்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மருத்துவ விசாரணையிலும் இது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறை மூலம் அந்த நபா் கண்காணிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டாா். பின்னா், அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில் மாவட்ட நிா்வாகம் பேகேப்பள்ளியை தீவிர கண்காணிப்பு பகுதியாக அறிவித்தது. மேலும், அந்த ஊராட்சிக்குள்பட்ட கோவிந்த அக்ரஹாரம், ராஜேஸ்வால் லேஅவுட் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

பேகேப்பள்ளி பகுதி முழுவதும் கடந்த 2 நாள்களாக, ஒசூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆப்தாப் பேகம், ராமச்சந்திரன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. பேகேப்பள்ளி எல்லையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பேகேப்பள்ளி கிராமம் தனிமைப்படுத்தப்பட்டதை அடுத்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், அத்தியாவசியப் பொருள்கள் அவரவா் வீட்டுக்கே சென்று வழங்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசியத் தேவைக்கு ஒரு நபா் மட்டுமே 2 சக்கர வாகனத்தில் சென்று வரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்ட நபரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னரே அவருக்கு கரோனா தொற்று உள்ளதா, இல்லையா என்பது தெரிய வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com