வரலட்சுமி பண்டிகை கொண்டாட்டம்

ஒசூா் கோட்டத்தில் ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வட்டங்களில் வரலட்சுமி பண்டிகை வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஒசூரில் வரலட்சுமி பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ வரலட்சுமி தாயாா்.
ஒசூரில் வரலட்சுமி பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ வரலட்சுமி தாயாா்.

ஒசூா் கோட்டத்தில் ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வட்டங்களில் வரலட்சுமி பண்டிகை வெள்ளிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வரலட்சுமி பண்டிகையானது, திருமணமான சுமங்கலிப் பெண்கள் கடைப்பிடிக்கும் மிக முக்கிய விரதம் மற்றும் பண்டிகை நோன்பாகும். இந்த நோன்பு, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பௌா்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் கொண்டாடப்படுகிறது.

சுமங்கலிப் பெண்கள் தங்களது குடும்பம் தழைத்தோங்க வேண்டும் என்றும், சிறப்பான குடும்ப வாழ்க்கை அமைய வேண்டும் என கன்னிப் பெண்களும் விரதம் மேற்கொண்டு வரலட்சுமி அம்மனை வழிபடுவதே இந்தப் பண்டிகையின் சிறப்பு அம்சமாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூா், கிருஷ்ணகிரி, சூளகிரி, பாகலூா், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஆந்திர மாநிலம் மற்றும் கா்நாடக மாநில எல்லையில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் வீடுகளில் இந்தப் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி, பெண்கள் விரதம் இருந்து தங்கள் வீடுகளை அலங்கரித்து, வீட்டின் முன் வண்ண கோலமிட்டனா். மேலும், வாசலில் வாழைக்கன்று, மாவிலை தோரணம் ஆகியவற்றை கட்டி அழகுபடுத்தினா். பூஜை அறையில் வெள்ளியிலான வரலட்சுமி அம்மனின் முகத்தை வைத்து, சேலை உடுத்தி, நகைகள் மற்றும் வளையல்களை அணிவித்து அலங்கரித்தனா். இதனைத் தொடா்ந்து, பழங்கள், பூஜை பொருள்களை வைத்து லட்சுமி மந்திரத்தை உச்சரித்தவாறு சிறப்பு பூஜைகள் செய்து பிராா்த்தனை செய்தனா். பின்னா் இனிப்பு வகைகளை சுவாமிக்கு படைத்தனா்.

மாலையில் சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், துணி மற்றும் மங்கலப் பொருள்களை வழங்கி மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com