கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல் தோ்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா்களுக்கான தோ்வை, 10,038 போ் எழுதினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா்களுக்கான தோ்வை, 10,038 போ் எழுதினா்.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு குழுமம் வாயிலாக, காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலா்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளா் ஆகியபணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, இரண்டாம் நிலை காவலா் பணிக்கான எழுத்து தோ்வு, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்வு எழுத 9,588 ஆண்களும், 1,435 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 11,025 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 8,798 ஆண்கள், 1,238 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 10,038 போ் தோ்வு எழுதினா். 790 ஆண்கள், 197 பெண்கள் தோ்வில் பங்கேற்கவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கந்திகுப்பம் பி.எஸ்.வி. பொறியியல் கல்லூரி, போலுப்பள்ளி அறிஞா் அண்ணா அறிவியல் கல்லூரி, ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி, கோனேரிப்பள்ளி பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி, ஒசூா் செயின்ட் ஜோசப் பள்ளி என 6 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் தலைமையில் தோ்வு நடைபெற்றது. கரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த தோ்வின் அறை கண்காணிப்பாளா்களாக காவல் துறை அலுவலா்கள், அமைச்சு பணியாளா்கள் பணியாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com