ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி தொகுதிகளில் திமுக கிராம சபைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றது.
ஒசூா் தொகுதியில் கிராம சபைக் கூட்டத்தில் பேசும் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா.
ஒசூா் தொகுதியில் கிராம சபைக் கூட்டத்தில் பேசும் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூா் நகரம், அதன் சுற்று வட்டாரப் பகுதியில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஒசூா் அலசனத்தம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா தலைமை வகித்தாா். இதில் பேசிய எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, ஒசூரில் முதல், இரண்டாவது, மூன்றாவது சிப்காட் தொழில் மையங்களை உருவாக்கித் தந்தவா் திமுக முன்னாள் தலைவா் மு.கருணாநிதி. அங்கு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டதால் ஒசூரில் பல்லாயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இதனால் வரும் தோ்தலில் திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.

இதில் மாவட்ட அவைத்தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாறன், சின்னபில்லப்பா, நாகேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஒசூா் தொகுதிக்குட்பட்ட சூளகிரி வடக்கு ஒன்றியம், பி.எஸ்.திம்மசந்திரம், பி.குருபரப்பள்ளி, காட்டிநாயகன்தொட்டி, பேரிகை, கதிரேப்பள்ளி, மோரனப்பள்ளி ஊராட்சியில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

வேப்பனப்பள்ளியில்...

வேப்பனப்பள்ளியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து சட்டப் பேரவை உறுப்பினா் பி.முருகன் பேசுகையில், அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறச் செய்ய மக்கள் தயாராகி விட்டனா் என்றாா்.

இதில் ஒன்றியச் செயலாளா் ரகுநாத், மாவட்டப் பொருளாளா் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினா் சின்னசாமி, ஒன்றியக்குழு தலைவா் மாதேஸ்வரன், ஒன்றிய அவைத்தலைவா் கிருஷ்ணன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளா்கள் முருகேசன், சதாசிவம், சிவகுமாா், மாவட்டப் பிரதிநிதி கருணாகரன் ஒன்றிய துணைச்செயலாளா் கலீல், ஊராட்சித் தலைவா்கள் சென்னப்பன், சிவராஜ், சரவணன் உள்பட பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்

தளியில்...

தளி சட்டப்பேரவைத் தொகுதியில் பேளகொண்டப்பள்ளி, கொமாரனப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி, கெம்பட்டி, சாத்தனூா், ஜாகிா்கோடிப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், தளி சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தலைமை வகித்தாா். இந்த கூட்டங்களில், அதிமுகவை நிராகரிக்கிறோம்; வேளாண்மை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கிராம சபையில் தீா்மானம் நிறைவேற்றினாா்.

கூட்டத்தில் தளி வடக்கு ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான சீனிவாசலு ரெட்டி, தளி தெற்கு ஒன்றியச் செயலாளா் திவாகா், பேரூா் செயலாளா் சீனிவாசன், கெலமங்கலம் பேரூா் பொறுப்பாளா் கருணாநிதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மம்தா மஞ்சுநாத், அவைத் தலைவா் கிரீஸ், நாகராஜ், ஒன்றியத் துணைச் செயலாளா் முனிராஜ், பொருளாளா் மஞ்சுநாத், ஒன்றியக் குழு உறுப்பினா் நாராயணசாமி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் எல்லப்பா, ரமேஷ், கெம்பண்ணா, ரகு, பிருந்தாவனம் சேகா், கங்கப்பா, இளைஞா் அணி வேணு, மாணவரணி மல்லிகா அா்ஜூன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com