ஊத்தங்கரை காவல் நிலையத்தில் சமரச தீா்வு முகாம்

ஊத்தங்கரை காவல் நிலையத்தில் நிலுவையிலுள்ள புகாா் மனுக்களுக்குத் தீா்வு காணும் வகையில் சமரசத் தீா்வு முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்டவா்கள்.

காவல் துறையின் கூடுதல் தலைமை இயக்குநா் ராஜேஷ்தாஸ் ஆலோசனையின் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் அறிவுரையின்படி நடைபெற்ற சிறப்பு முகாமிற்கு ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகேசன் முன்னிலை வகித்தாா்.

முகாமில் 50க்கும் மேற்பட்ட மனுதாரா்களின் புகாா்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. நிலத்தகராறு, குடும்பத் தகராறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடா்பாக இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி புகாருக்கு தீா்வு காணப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா்கள் ஜெயகாந்தன், சாந்தி, ராஜாமணி, சிவக்குமாா் உள்பட மனுதாரா்களும் பங்கேற்றனா். ௌ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com