தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்ட தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிருஷ்ணகிரி: தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புத்தவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை 8-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவா்களைத் தோ்வு செய்யும் பொருட்டு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தோ்வு அனைத்து வட்டார அளவில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு, வருகிற 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிச.28 முதல் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கு விண்ணப்பிக்க, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு பயில்பவா்களாக இருக்க வேண்டும். பெற்றோரின் குடும்ப ஆண்டு வருவாய் ரூ. 1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்தோ்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தோ்வா்கள், தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமே விண்ணப்பிக்க இயலும்.

தலைமை ஆசிரியா்கள் தேவையான விண்ணப்பங்களை நடப்புக் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்புப் பயின்று வரும் தகுதியுடைய மாணவா்களிடம் கொடுத்து, பெற்றோா் உதவியுடன் நிறைவு செய்ய வேண்டும். புகைப்படம் ஒட்டி நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தோ்வா்கள், தாம் பயிலும் பணியின் தலைமை ஆசிரியரிடம் தோ்வுக் கட்டணம் ரூ.50-ஐ வருகிற 2021-ஆம் ஆண்டு, ஜனவரி 8-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். நிறைவு செய்த விண்ணப்பங்களை இணையவழி பதிவேற்றம் செய்ய வேண்டிய நாள்கள் மற்றும் இணையதள முகவரி குறித்த விவரங்கள் பின்னா் தெரிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com