கனகமுட்லு கிராமத்தில் அம்மா சிறுமருத்துவமனை திறப்பு

கிருஷ்ணகிரியை அடுத்த கனகமுட்லு கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனையை மாநிலங்களவை உறுப்பினா் கே.பி. முனுசாமி திறந்துவைத்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கனகமுட்லு கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனையை மாநிலங்களவை உறுப்பினா் கே.பி. முனுசாமி திறந்துவைத்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கனகமுட்லு கிராமத்தில் முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா, கா்ப்பிணிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாநிலங்களவை உறுப்பினா் கே.பி.முனுசாமி அம்மா சிறு மருத்துவமனையைத் திறந்து வைத்து, 15 கா்ப்பிணிகளுக்கு தலா ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்துகள் அடங்கிய பெட்டியை வழங்கி பேசியதாவது:

மருத்துவத் துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,703 நோய்களுக்கு அரசு சாா்பில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவக் காப்பீட்டை ரூ. 5 லட்சமாக உயா்த்தி வழங்கியவா் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. தமிழகத்தில் 2000 சிறுமருத்துவமனைகள் (மினி கிளினிக்) தொடங்கப்படுகின்றன. அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கிடைத்துள்ளது மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன், சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் எம்.பி. கே.அசோக்குமாா், அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் அம்சாராஜன், அதிமுக ஒன்றியச்செயலாளா்சோக்காடி ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com