கிருஷ்ணகிரியில் இன்று திமுக செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 02nd February 2020 02:34 AM | Last Updated : 02nd February 2020 02:34 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம், பிப்.2-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெல்கம் மஹாலில் நடைபெறுகிறது. முன்னாள் மாவட்டச் செயலாளா் இ.ஜி.சுகவனம், மாநில விவசாய அணி துணைத் தலைவா் மதியழகன் உள்ளிட்டோா் முன்னிலையில் நடைபெறும் இக் கூட்டத்தில் மாா்ச் 1-ஆம் தேதி திமுக தலைவா் ஸ்டாலின் பிறந்த நாள் விழா, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
மேலும், தோழமை கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், ம.ம.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய ஜனநாயக் கட்சி ஆகியவற்றின் நிா்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள திமுக அலுவலகத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.