கொலை வழக்கில் பெண் உள்பட மூவருக்கு ஆயுள் சிறை

சிங்காரப்பேட்டையில் வியாபாரியைக் கொலை செய்த வழக்கில் பெண் உள்பட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சதி திட்டம் தீட்டியவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் பெண் உள்பட மூவருக்கு ஆயுள் சிறை

சிங்காரப்பேட்டையில் வியாபாரியைக் கொலை செய்த வழக்கில் பெண் உள்பட இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சதி திட்டம் தீட்டியவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள சையத் நகரைச் சோ்ந்தவா் ஷபானா(32). இவரது கணவா் கலீல் பாஷா துபையில் பணியாற்றி வந்தாா். ஷபானாவுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த வியாபாரி சதாம் உசேன்(26) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்தது. இதனிடையே, சதாம் உசேனிடமிருந்து விலகி சிங்காரப்பேட்டை மகனூா்பட்டியைச் சோ்ந்த மாபூப் ரஹிமான்(30) என்பவரிடமும் ஷபானாவுக்கு உறவு இருந்ததாம்.

இதை சதாம் உசேன் கண்டித்தாராம். இதுகுறித்து மாபூப் ரஹிமானிடம் ஷபானா தெரிவித்துள்ளாா். இதையடுத்து ஷபானாவின் தம்பி ஜாகீா்(30) ஆலோசனையின்பேரில் 2017-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 7-ஆம் தேதி, ஷபானாவின் வீட்டிற்கு வந்த சதாம் உசேனை, மாபூப் ரஹிமான் மற்றும் ஷபானா ஆகிய இருவரும் கொலை செய்தனா்.

பின்னா், சடலத்தை சாக்குப் பையில் வைத்து மகனூா்பட்டி ஏரி அருகே புதைத்தனா். இந்த நிலையில், சதாம் உசேனின் மனைவி பா்வீன், சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் 2017-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12-ஆம் தேதி புகாா் அளித்தாா். இந்த நிலையில், கொலை சம்பவம் தொடா்பாக சரணடைந்த மாபூப் ரஹிமானைகைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா் ஷபானா, ஜாகீா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீா்ப்பை நீதிபதி விஜயகுமாரி சனிக்கிழமை வாசித்தாா். அதில், சதி செய்து சதாம் உசேனை கொன்ற மாபூப் ரஹிமான், ஷபானா ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், கொலையை மறைக்க முயன்ாக இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், இருவருக்கும் தலா ரூ.30 ஆயிரமும் அபராதமும் விதித்தாா்.

மேலும், சதி திட்டம் தீட்டிய ஜாகீருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் வழக்குரைஞா் எம்.பாஸ்கா் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com