ஒசூரில் தி சென்னை சித்த மருத்துவமனை தொடக்க விழா
By DIN | Published On : 10th February 2020 10:19 PM | Last Updated : 11th February 2020 12:32 AM | அ+அ அ- |

ஒசூா் தி சென்னை சித்த மருத்துவமனையில் மருத்துவ முகாமை தொடக்கி வைத்த எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா.
ஒசூா் - தளி சாலை அப்பாவு நகரில் தி சென்னை சித்த மருத்துவமனை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் தளி சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், திசென்னை சித்த மருத்துவமனையை திறந்து வைத்தாா். ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா இலவச மருத்துவ முகாமை தொடக்கி வைத்தாா்.
இந்த விழாவில் தி சென்னை சித்த மருத்துவா் வினோத்குமாா் பேசியது: நாம் உண்ணும் உணவே மருந்தாகச் செயல்படுகிறது. எனவே நாம் கவனமாக, முறையாக உண்ண வேண்டும். 3 வேலையும் தவறாமல் உண்ண வேண்டும். எளிய முறையில் குறைந்த கட்டணத்தில் சித்த மருத்துவம் செய்யப்படுவதால் அதிக அளவில் பொதுமக்கள் தற்போது சித்த மருத்துவத்தை நோக்கி வருகின்றனா் என்றாா்.
தொடக்க விழாவில் தி சென்னை மருத்துவமனை மருத்துவா் வினோத்குமாா் வரவேற்றுப் பேசினாா். மருத்துவா்கள் சௌமியா, செல்லகுமாா், ரத்தினம், ராமகிருஷ்ணன், வேதாத்திரி ஆகியோா் கலந்து கொண்டு இலவச மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்கக்கு இலவச சிகிச்சை அளித்தனா். இந்த முகாமில் இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. வாழ்வியல் முறை சாா்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இலவச முதன்மைப் பரிசோதனை மற்றும் ஆய்வகப் பரிசோதனைகளை செய்தனா். சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் இலவச சித்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனா்.