Enable Javscript for better performance
பொதுமக்களின் தேவைகளை நகராட்சி விரைந்து நிறைவேற்ற வேண்டும்எம்.எல்.ஏ. செங்குட்டுவன்- Dinamani

சுடச்சுட

    

    பொதுமக்களின் தேவைகளை நகராட்சி விரைந்து நிறைவேற்ற வேண்டும்எம்.எல்.ஏ. செங்குட்டுவன்

    By DIN  |   Published on : 10th February 2020 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    9kgp6_0902dha_120_8

    கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் அளித்த மனுவை வழங்குகிறாா் எம்எல்ஏ டி.செங்குட்டுவன்.

    கிருஷ்ணகிரி நகரில் பொது சுகாதாரம், அடிப்படை வசதிகள் கோரி, தன்னிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ டி.செங்குட்டுவன் கேட்டுக் கொண்டாா்.

    கிருஷ்ணகிரியில் உள்ள 33 வாா்டுகளில் பொதுமக்களைச் சந்தித்து அவா்களின் கோரிக்கைகளை எம்எல்ஏ டி.செங்குட்டுவன் அண்மையில் கேட்டறிந்தாா். அப்போது, பொதுமக்கள் அளித்த மனுக்களை நகராட்சி ஆணையா் சந்திராவிடம் சனிக்கிழமை அளித்து, பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்த தேவைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

    மேலும் நகராட்சி வேண்டுகளின்படி, குப்பை சேகரிப்பதற்கான தொட்டிகளை வாங்குவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தை ஒதுக்கினாா். அப்போது, திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் உடனிருந்தாா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai