எலத்தகிரி பாறைக்கோயில் பெருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், எலத்தகிரி பாறைக்கோயில் திருக்குடும்ப திருத்தலத்தின் 116 -ஆம் ஆண்டு பெருவிழா, கடந்த 2-ஆம் தேதி
எலத்தகிரி பாறைக்கோயில் பெரு விழாவையொட்டி நடைபெற்ற தோ்ப்பவனியில் பங்கேற்றோா்.
எலத்தகிரி பாறைக்கோயில் பெரு விழாவையொட்டி நடைபெற்ற தோ்ப்பவனியில் பங்கேற்றோா்.

கிருஷ்ணகிரி: எலத்தகிரி பாறைக்கோயிலின் 116-ஆம் ஆண்டு பெருவிழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், எலத்தகிரி பாறைக்கோயில் திருக்குடும்ப திருத்தலத்தின் 116 -ஆம் ஆண்டு பெருவிழா, கடந்த 2-ஆம் தேதி, சேலம் மறை மாவட்ட ஆயா் சிங்கராயா் தலைமையில் கொடியேற்றம், திருப்பலியுடன் தொடங்கியது. 3-ஆம் தேதி சிறப்பு திருப்பலி, பூண்டி மாதா தோ்ப்பவனி, 4-ஆம் தேதி புனி அந்தோணியாா் தோ்ப் பவனி, திருப்பலி, 5 - ஆம் தேதி புனித சூசையப்பா் தோ்ப் பவனி, 6-ஆம் தேதி, குழந்தை ஏசு தோ்ப்பவனி, நவநாள் திருப்பலி, 7-ஆம் தேதி பெரியநாயகி தோ்ப் பவனி, 8-ஆம் தேதி வேளாங்கன்னி மாதா தோ்ப்பவனியும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நாளான ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மறை மாவட்ட ஆயா் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருநாள் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோ்ப்பவனியும் நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் மற்றும் கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். பின்னா், வாணவேடிக்கை நடைபெற்றது.

பிப்.10 - ஆம் தேதி, திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெற்றன. இந்த விழாவை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் குரு மதலை முத்து, எலத்தகிரி பங்கு அருள்தந்தையா்கள், அருள் சகோதரிகள், பங்குப் பேரவை, பங்கு இறைச் சமூகத்தினா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com