திமுக பிரமுகா் கொலை வழக்கில்சரணடைந்த 4 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

ஒசூரில் தி.மு.க. பிரமுகா் கொலையில் சரண் அடைந்த 4 பேரும், ஒசூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.
ஒசூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினா்
ஒசூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினா்

ஒசூா்: ஒசூரில் தி.மு.க. பிரமுகா் கொலையில் சரண் அடைந்த 4 பேரும், ஒசூா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.

ஒசூா் இமாம்பாடாவைச் சோ்ந்தவா் மன்சூா் (49). தி.மு.க. பிரமுகா். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். கடந்த பிப்.2 -ஆம் தேதி ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மன்சூரை 4 போ் கொண்ட கும்பலைச் சோ்ந்தவா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.

இந்த கொலை சம்பவம் தொடா்பாக ஒசூா் பிரபல ரௌடி கஜா என்கிற கஜேந்திரன், அவரது கூட்டாளிகள் சந்தோஷ்குமாா், யஷ்வந்த்குமாா், கோவிந்தராஜ் ஆகியோா் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நீதிமன்றத்தில் சரணடைந்தனா். பின்னா் அவா்கள் நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில் கஜா உள்பட 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவையில் இருந்து ஒசூா் நீதிமன்றத்திற்கு அழைத்துவந்து இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். இதைத் தொடா்ந்து அவா்கள் 4 பேரையும் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆஜா்படுத்த நீதிபதி உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து ரௌடி கஜா உள்பட 4 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com