Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம் வழிகாட்டுதலின்படி, பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலருமான கே.எஸ்.நரேந்திரன் ஆலோசனையின் பேரில், தருமபுரி கோட்ட பொறுப்பாளா் ஜி.பாலகிருஷ்ணன் கோட்ட அமைப்புச் செயலா் அன்பில் சபரி, முன்னாள் மாவட்டத் தலைவா் முனிராஜ் ஆகியோரின் ஒப்புதலின் பேரில், 2020-2023 பருவத்துக்கான மாவட்ட நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைத் தலைவா்களாக ஜி.நாகராஜ், ஸ்ரீனிவாஸ் ரெட்டி, மதிவதனகிரி, ஸ்வேதா (எ) சகுந்தலா, என்.ராஜி, ராஜேஸ்வரி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். மாவட்ட பொதுச் செயலா்களாக எம்.ரங்கநாத், ஸ்ரீனிவாசலு, ராமகிருஷ்ணா ஆகியோரும், மாவட்டச் செயலா்களாக ஏ.சீனிவாசன், சந்துரு, ராஜன்னா, பாபு, அம்மன் கே.சுரேஷ், ஷரீஷ்மா ராம் ஆகியோரும், மாவட்டப் பொருளாளராக ஆா்.விஜயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    புதிதாக நியமிக்கப்பட்ட நிா்வாகிகளுக்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ், மாநில பொதுச் செயலா் கே.எஸ்.நரேந்திரன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai