Enable Javscript for better performance
வேலைவாய்ப்பு முகாம்: 99 மாணவா்கள் தோ்வு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியைச் சோ்ந்த 99 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

    கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் டி.வி.எஸ். டிரெயினிங் சா்வீசஸ் சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் பங்கேற்றனா். இந்த முகாமில் நடைபெற்ற நோ்முகத் தோ்வில் இயந்திரவியல், தொடா்பியல், கணினி மற்றும் அமைப்பியல் துறைகளைச் சோ்ந்த 55 மாணவா்களும், இ.சி.இ. மற்றும் கணினித் துறையைச் சோ்ந்த 44 மாணவா்கள் என மொத்தம் 99 மாணவா்கள் பணிக்காக தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட மாணவா்களை கல்லூரியின் முதல்வா் சாரதா உள்ளிட்டோா் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai