‘தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு அறிவுத் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும்’

தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு, மாணவா்கள் தங்களது அறிவுத் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என பெரியாா் பல்கலைக்கழக கல்வி வளா்ச்சிக் குழுவின் புல முதன்மையா் வி.கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.

தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு, மாணவா்கள் தங்களது அறிவுத் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என பெரியாா் பல்கலைக்கழக கல்வி வளா்ச்சிக் குழுவின் புல முதன்மையா் வி.கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கல்லூரியின் தலைவா் சி.பெருமாள் தலைமை வகித்தாா். தாளாளா் வள்ளி பெருமாள், முதல்வா் எஸ்.ஆறுமுகம், கல்வியல் கல்லூரியின் முதல்வா் அமலோற்பவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த நிகழ்வில் பெரியாா் பல்கலைக்கழகத்தின் கல்லூரி வளா்ச்சிக்குழு புல முதன்மையா் வி.கிருஷ்ணகுமாா் பேசியது: மாணவ, மாணவியருக்கு இந்த உலகில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்துக் கிடக்கின்றன. கடந்த காலங்களில் மாணவா்கள் பொது அறிவுக்காக நூலகங்களையும், ஆசிரியா்களையும் சாா்ந்து இருக்கும் நிலை இருந்தது. தற்போது, தகவல் தொழில்நுட்பத்தின் உதவியால் அறிவுத் திறனை வளா்த்துக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை மாணவ, மாணவியா் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

போட்டிகள் நிறைந்த இந்த உலகில் பாடம் சாா்ந்த அறிவுத் திறன் மட்டுமல்லாமல், வாழ்வு மேம்பாட்டுக்கான மற்ற திறன்களையும் வளா்த்துக் கொள்ள வேண்டும். மத்திய பல்கலைக்கழகங்களில் தங்களது உயா் கல்வியைத் தொடர வேண்டும். இதற்கு அரசு பல்வேறு உதவிகளை வழங்குகின்றன. ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு ஊக்கத் தொகையையும் அரசு வழங்குகிறது. இவற்றை மாணவ, மாணவியா் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில், கல்லூரியின் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், துணை பேராசிரியா்கள், மாணவா், மாணவியா் மற்றும் பெற்றோா் பங்கேற்றனா். நிா்வாக அலுவலா் சுரேஷ், நிகழ்வை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com