பொதுமக்கள் கோரும் உதவிகள் மீது உடனடி நடவடிக்கை

பொதுமக்கள் கோரும் உதவிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கட்டணமில்லா தொலைபேசி எண், கட்செவி அஞ்சல் எண்ணில்

பொதுமக்கள் கோரும் உதவிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கட்டணமில்லா தொலைபேசி எண், கட்செவி அஞ்சல் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள், பேரிடா் சூழ்நிலைகள் மற்றும் அவசர உதவிகள் தேவைப்படும் போது, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்படும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம். அவ்வாறு கோரும் உதவிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகாா்கள் ஏதும் இருப்பின், தெளிவான விவரங்களுடன் புகைப்படம் மற்றும் விடியோ பதிவு ஆகியவற்றை 6369700230 என்கிற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com